பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு?

0
132
Allocation of funds in the budget! 100-day work program likely to reduce wages?
Allocation of funds in the budget! 100-day work program likely to reduce wages?

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஆண்டுதோறும் 100 நாட்களுக்கு வேலை மக்களுக்கு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்ப்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியம் வழங்கப்படுகிறது.

இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பணி ஏற்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் கடந்த பட்ஜெட்டில் அந்த அமைச்சகத்திற்கு முதலில் ரூ 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி நிதி ஒதுக்கீடு ரூ 1 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில் ரூ 1 லட்சத்து 57 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.நிதி ஒதுக்கீடு 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.அதற்கு ரூ 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு முதலில் ரூ 73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.அதன் பிறகு திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி ரூ 89 ஆயிரத்து 400 கோடியாக உயர்த்தப்பட்டது.அதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ரூ 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது 32 சதவீதம் குறைவு ஆகும்.அதாவது 3ல் ஒரு பங்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டை போல் ரூ 19 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் அஜீவிகா எனப்படும் தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ14 ஆயிரத்து 129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ 54 ஆயிரத்து 487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கியதை வீட்டா அதிகம்.மேலும் சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

author avatar
Parthipan K