தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

0
222
heavy rain is a holiday for schools and colleges! Do you know which district?
heavy rain is a holiday for schools and colleges! Do you know which district?

தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு மேற்கு  மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு நாளை அதிகாலைக்குள் இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லப்புரம் அருகில் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்கு கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் மாண்டஸ் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை வேலூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,சென்னை ,திருவள்ளூவர் ,கடலூர் ,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleமெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த நேரத்தில் தான் ரயில்கள் இயக்கப்படும்!
Next articleநடு ரோட்டில் சட்டை இல்லாத அண்ணாமலை.. என்னங்க நீங்க இப்படி பண்றீங்க! முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!