இந்த 5 மாவட்டங்களுக்கு 23 மற்றும் 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

இந்த 5 மாவட்டங்களுக்கு 23 மற்றும் 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Parthipan K

Updated on:

Heavy rain on 23 24 dates for these five districts! Announcement issued by Chennai Meteorological Department!

இந்த 5 மாவட்டங்களுக்கு 23 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம்   கூறுகிறது.

மேலும் வரும் 23 மற்றும் 24 போன்ற தேதிகளில் நீலகிரி ,கோவை,தேனி ,திண்டுக்கல் ,திருப்பூர் போன்ற 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டமாக  ஆக காணப்படும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடல் ,வட ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று அடிக்கும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.