இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

0
236
12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!
12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி, திருப்பூர் ,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிருயிடங்களில்  இடி மின்னல் கூடிய லேசானது  முதல் கனமழை வரை பெயர் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ,கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு ,திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஇந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை!
Next articleநெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !..