இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
151
Heavy rain warning for these nine districts! Chennai Meteorological Center information!
Heavy rain warning for these nine districts! Chennai Meteorological Center information!

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நாளை 12  மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 6 ஆம் தேதி நீலகிரி ,கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குமரிக்கடல் ,தென் தமிழகம் கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleஇருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!  
Next articleகர்ப்ப காலத்தில் உடலுறவு நல்லதா? கெட்டதா?