நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!
உங்களில் பலர் மார்பு பகுதியில் ஒருவித ஊசி குத்துதல் உணர்வை அனுபவித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை மாரடைப்பின் அறிகுறி என்று பலம் எண்ணி அஞ்சி வருகின்றனர். ஆனால் இது மார்பு பகுதியில் தேங்கும் வாயுவால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு ஆகும்.
செரிமானக் கோளாறு, அடிக்கடி ஏப்பம், மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த வாயு வலி ஏற்படுகிறது.
மார்பு வாயு வலிக்கான அறிகுறிகள்:-
1)மார்பு பகுதியில் எரிச்சல்
2)மார்பு இறுக்கம்
3)மார்பு பகுதியில் ஊசி குத்தல் உணர்வு
4)உணவு உண்ட பின்னர் அசௌகரிய உணர்வு
தீர்வு 01:-
*இஞ்சி
*தேன்
செய்முறை:-
ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி இடித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அடுத்து அதில் இடித்த இஞ்சி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் மார்பில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் நீங்கி விடும்.
தீர்வு 02:-
*பூண்டு
*தேன்
செய்முறை:-
ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அடுத்து அதில் இடித்த பூண்டை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் மார்பில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் நீங்கி விடும்.