மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மூலிகை உருண்டை – தயார் செய்வது எப்படி?
இன்றைய உலகில் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம்.. கடந்த காலங்களில் தாத்தா பாட்டிக்கு இருந்த எலும்பு வலிமை கூட இன்றைய இளம் தலைமுறையினருக்கு இல்லை.
எளிதில் மூட்டு வலி, ஜவ்வு தேய்மானம், மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், எலும்பில் விரிசல்.. உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி தீர்வு காணுங்கள்.
தேவையான பொருட்கள்…
*முடக்கத்தான் கீரை
*பிரண்டை
*கருப்பு உளுந்து
*வெந்தயம்
*பார்லி
செய்முறை…
ஒரு கப் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை மற்றும் பிரண்டையை நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கருப்பு உளுந்து, 1/2 கப் பார்லி மற்றும் ஒரு கப் வெள்ளை உளுந்து போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விட்டு மறுநாள் அதை காய வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து காயவைத்து அதில் காயவைத்த கருப்பு உளுந்து, பார்லி மற்றும் வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். இதனுடன் காயவைத்த முடக்கத்தான் கீரை மற்றும் பிரண்டையை சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 4 ஸ்பூன் அளவு அரைத்த பொடி சேர்த்து கைவிடாமல் காய்ச்சவும். இவ்வாறு செய்தால் கஞ்சி பதத்திற்கு வரும்.
இந்த கஞ்சியை ஆறவிட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பாதிப்பு, மூட்டு வலி, ஊட்டச்சத்து குறைபாடு அனைத்தும் குணமாகும்.