சிறுநீரக கல் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

0
212
#image_title

சிறுநீரக கல் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

நம் உடலில் முக்கிய உள்ளுறுப்பாக இருக்கும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அவ்வாறு செய்யத் தவறினால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இதில் சிறுநீரக கல் பாதிப்பு அனைவரும் சந்திக்கும் ஒன்றாக இருக்கிறது. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று சேர்ந்து சிறுநீர் பாதையில் கற்களை உருவாக்குகிறது.

இதனால் சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், வலி, துர்நாற்றத்துடனான சிறுநீர் வெளியேறுதல், இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல் போன்றவை ஏற்படுகிறது.

சிறுநீரக கல் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி உள்ளிட்ட பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

சிறுநீரக கல் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ:-

1)தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அவசியம் அருந்தி வர வேண்டும்.

2)நீர்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.

3)ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

4)வாழைத்தண்டில் சூப், பொரியல் செய்து சாப்பிட்டு வரவும்.

5)உணவில் அதிகளவு உப்பு சேர்த்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளவும்.

6)சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ் அதிகளவு அருந்தவும்.

7)சிறுகண் பீளை பூவை ஆட்டுப்பாலில் அரைத்து சாப்பிட்டு வரலாம்.

8)தினமும் காலை நேரத்தில் சிறிதளவு துளசி சாப்பிட்டு வரலாம்.

9)உணவில் தக்காளியை சேர்த்துக் கொள்வது நல்லது. தக்காளியை ஜூஸ் செய்து சாப்பிட்டு வரலாம்.

10)ரணகள்ளி இலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் அருந்தி வந்தால் சிறுநீரக கல் வராமல் இருக்கும். சிறுநீரக கல் இருந்தாலும் சில தினங்களில் கரைந்து விடும்.