உடல் எடையை ஒரு வாரத்தில் குறைக்க 8 சிம்பிள் டிப்ஸ் இதோ!

0
212
#image_title

உடல் எடையை ஒரு வாரத்தில் குறைக்க 8 சிம்பிள் டிப்ஸ் இதோ!

1)புதினா இலை 1/4 கப் அளவு எடுத்து 1 கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை மளமளவென குறைந்து விடும்.

2)சியா விதியை 1 கிளாஸ் நீரில் ஊறவைத்து அதில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறைந்து விடும்.

3)1 கிளாஸ் நீரில் 1/2 ஸ்பூன் ஓமம் மற்றும் 1/2 ஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் முழுவதும் கரைந்து விடும்.

4)ஒரு கிளாஸ் சூடு நீரில் 1 ஸ்பூன் காபி தூள், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

5)கொள்ளு பருப்பை பொடி செய்து 1 கிளாஸ் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அனைத்தும் கரைந்து விடும்.

6)ஒரு கிளாஸ் நீரில் 1 துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி 1 ஸ்பூன் தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

7)ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை பருகவும். இவ்வாறு செய்தால் உடல் பிட்டாக இருக்கும்.

8)புதினா சிறிதளவு, கேரட் 1, பீட்ரூட் 1 எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தால் உடல் எடை சில தினங்களில் குறைந்து விடும்.