மருக்கள் உதிர சூப்பர் டிப்ஸ் இதோ!

Photo of author

By Divya

மருக்கள் உதிர சூப்பர் டிப்ஸ் இதோ!

1)ஒரு ஸ்பூன் தேன், 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிட்டிகை அளவு மஞ்சள் கலந்து உள்ள இடத்தில் தடவினால் அவை விரைவில் உதிர்ந்து விடும்.

2)பாலில் மஞ்சள் கலந்து குழைத்து மருக்கள் மீது தடவி வர அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்.

3)ஒரு பல் பூண்டை இடித்து ஆமணக்கு எண்ணெயில் சேர்த்து குழைத்து மருக்கள் மீதி தடவி வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

4)சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அரைத்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் உதிர்ந்து விடும்.

5)இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி அரைத்து அதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் உதிர்ந்து விடும்.

6)வாழை பழத் தோலை அரைத்து மருக்கள் உள்ள இடத்தில் பூசி வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

7)ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து மருக்கள் மீது தடவலாம்.

8);பூண்டு பல்லை இடித்து மருக்கள் மீது தேய்த்தால் அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்.