படுத்தி எடுக்கும் முதுகு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ!

Photo of author

By Divya

படுத்தி எடுக்கும் முதுகு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ!

பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவருக்கும் முதுகு வலி சாதாரணமாக ஏற்படும் பாதிப்பாக மாறிவிட்டது. நீண்ட நேரம் ஓர் இடத்தில் உட்கருதல், வயது மூப்பு, வேலைப்பளு ஆகியவற்றால் முதுகு வலி ஏற்படுகிறது.

இந்த முதுகு வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பார்க்கவும்.

தேவைப்படும் பொருட்கள்…

*வால்நட்

*உலர் திராட்சை

*பாதாம்

*எலுமிச்சை பழம்

செய்முறை…

முதலில் 50 கிராம் அளவு வால்நட் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து 50 கிராம் அளவு உலர் திராட்சை எடுத்துக் கொள்ளவும். அதேபோல் பாதம் 50 கிராம் அளவு எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.

பின்னர் 1 எலுமிச்சம் பழத்தை தோல் நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதன் விதையை மட்டும் நீக்கி விடவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள வால்நட், உலர் திராட்சை, பாதாம் மற்றும் எலுமிச்சை சேர்த்து ஒரு சுத்து விடவும்.

பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும். இந்த பேஸ்டை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சேர்த்து ப்ரிட்ஜில் வைக்கவும்.

இதை பேஸ்டை தினமும் 1 தேக்கரண்டி அளவு காலை நேரத்தில் சாப்பிட்டு வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட முதுகு வலி, கழுத்து வலி முழுமையாக குணமாகும்.