வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் நீங்க எளிய தீர்வு இதோ..!

0
177
#image_title

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் நீங்க எளிய தீர்வு இதோ..!

மலச்சிக்கல் என்பது பொதுவான உடல் நல பாதிப்பாக பார்க்கப்படுகிறது. மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். நம் அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த மலச்சிக்கல் பாதிப்பை சந்தித்து இருப்போம். இந்த மலச்சிக்கல் பாதிப்பால் உடல் ஆரோக்கியம் இழந்து நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.

மலச்சிக்கல் பாத்திற்கான காரணங்கள்:-

*மன அழுத்தம்

*உட்கார்ந்த வாழ்க்கை முறை

*உடலுக்கு தேவையான திரவம் உட்கொள்ளாமை

*நார்ச்சத்து குறைபாடு

மலச்சிக்கல் அறிகுறிகள்:-

*மலம் கழிக்கும் பொழுது வலி உணர்வு

*மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்

*வறண்ட மலம் வெளிறுதல்

*நீரிழிவு

*உடல் நலக் கோளாறு

தேவையான பொருட்கள்:-

*உலர் திராட்சை

*இஞ்சி

*தண்ணீர்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 10 உலர் திராட்சை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.

மறுநாள் காலையில் அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 1 துண்டு இஞ்சியை இடித்து அதில் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.

இவ்வாறு செய்தால் உடலில் தேங்கி கிடந்த மலக் கழிவுகள் முழுவதும் நீங்கி விடும்.