உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

0
50
#image_title

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த உடல் சூடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு:-

*பித்தம்

*தலைமுடி உதிர்தல்

*வாய்ப்புண்

*தோல் தொடர்பான பாதிப்பு

உடல் உஷ்ணத்தை தணிக்க எளியத் தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி

*தண்ணீர்

*சோம்பு

*சீரகம்

*கற்கண்டு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை, 1 தேக்கரண்டி சோம்பு மற்றும் சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து முந்தின நாள் இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் அடுப்பில் பாத்திரம் வைத்து ஊற வைத்துள்ள பொருட்களை தண்ணீருடன் சேர்க்கவும். அதன் பின் 1 துண்டு கற்கண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். நாம் சேர்த்துள்ள பொருட்கள் அனைத்தும் உடல் உஷ்ணத்தை குறைக்கக் கூடிய பொருளாகும்.