கொய்யா இலையின் பயன்கள் மற்றும் அதில் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்த விவரம் இதோ!!

0
134
#image_title

கொய்யா இலையின் பயன்கள் மற்றும் அதில் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்த விவரம் இதோ!!

கொய்யா இலையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்,வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த இலையை வைத்து தேநீர் செய்து பருகினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

கொய்யா இலை – 20

தேன் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் கொய்யா இலை 20 என்ற எண்ணிக்கையில் எடுத்து நன்கு சுத்தம் செய்து நிழலில் காயவைக்க வேண்டும்.பின்னர் அவை நன்கு காய்ந்ததும் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்து கொள்ளவும்.

அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள கொய்யா இலை பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.இதில் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

கொய்யா இலையால் மனித உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:-

*செரிமான கோளாறு இருக்கும் நபர்கள் 5 முதல் 8 கொய்யா இலையை எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும்.இதனுடன் தேன் அல்லது பனகற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

*சொத்தைப்பல் வலி,வாய்ப்புண்,ஈறுகளில் பிரச்சனை இருப்பவர்கள் 5 கொய்யா இலையை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வருவதன் மூலம் உடனடி தீர்வு கிடைக்கும்.

*கொய்யா இலையை வைத்து தேநீர் செய்து பருகி வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

*கொய்யா இலையை வைத்து தேநீர் செய்து பருகி வருவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க முடியும்.இதனால் உடல் பருமன் பிரச்சனை விரைவில் சரியாகும்.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்கள் கொய்யா இலையை பச்சையாக மென்று சாப்பிடலாம்.இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

*கடுமையான இருமல் மற்றும் சளி தொல்லை இருப்பவர்கள் கொய்யா இலையை வைத்து கஷாயம் செய்து சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

Previous articleவீடே மணக்கும் மசாலா டீ.. இந்த இரண்டு பொருட்கள் சேர்த்தால் மட்டும் போதும்!!
Next articleஅடடா என்ன ஒரு டேஸ்டான வெங்காய சட்னி!! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!