BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ!
உயர் இரத்த அழுத்தத்தை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்துங்கள்.
தீர்வு 01:
*கடுக்காய்
*சீரகம்
*கொத்தமல்லி
*நாட்டு சர்க்கரை
செய்முறை…
ஒரு பாத்திரத்தில் ஒரு கடுக்காய் இடித்தது, 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம்(BP) குறையும்.
தீர்வு 02:-
*ஆவாரம் பூ
*இலவங்க பட்டை
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவு ஆவாரம் பூ மற்றும் 1 துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
தீர்வு 03:-
*சீரகம்
*மருதம்பட்டை
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவு சீரகம் மற்றும் 1 துண்டு மருதம்பட்டை சேர்த்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
தீர்வு 04:-
*நெல்லிக்காய்
*சுக்கு
ஒரு உரலில் 1 நெல்லிக்காய் மற்றும் 1 துண்டு சுக்கு போட்டு இடித்துக் கொள்ளவும்.
இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் பிபி குறையும்.