சொத்தைப்பல் வீக்கத்தில் இருந்து விடுபட எளிய வழி இதோ!! உடனே ட்ரை பண்ணுங்க அற்புதமான ரிசல்ட் கிடைக்கும்!!

0
36
#image_title

சொத்தைப்பல் வீக்கத்தில் இருந்து விடுபட எளிய வழி இதோ!! உடனே ட்ரை பண்ணுங்க அற்புதமான ரிசல்ட் கிடைக்கும்!!

முறையற்ற உணவு முறை பழக்கத்தால் விரைவில் பற்கள் சொத்தையாகி விடுகிறது.இதனால் ஈறுகளில் வலி,பல் வீக்கம்,பல் குடைச்சல்,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது.

அதிகப்படியான இனிப்பு பொருட்களை உண்பது,முறையாக பல் துலக்காதது போன்றவை பல் சொத்தையாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.இந்த சொத்தைப் பற்களால் வீக்கம் ஏற்படும் வீக்கத்தை குணமாக்க வீட்டில் உள்ள புளி,மிளகு,பூண்டு உள்ளிட்ட பொருட்களை வைத்து கீழே சொல்லப்பட்டுள்ள முறைப்படி உபயோகித்து பாருங்கள்.உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*புளி – சிறிதளவு

*மிளகு – 5

*பூண்டு – ஒரு பல்

*உப்பு – சிறிதளவு

செய்முறை:-

1) சுத்தமான காட்டன் துணி ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும்.

2) அதில் புளி ஒன்றை சேர்த்து கொள்ளவும்.புளியில் கொட்டை,நார் உள்ளிட்டவற்றை நீக்கி விட வேண்டும்.

3) பிறகு அந்த காட்டன் துணியில் 5 கருப்பு மிளகு சேர்க்கவும்.

4) ஒரு பல் பூண்டு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அந்த காட்டன் துணியை மூடி கொள்ளவும்.

5) பிறகு அதை ஒரு மத்து வைத்து இடித்து கொள்ளவும்.

6) இதையடுத்து அந்த காட்டன் துணியை ஒரு நூல் வைத்து கட்டி சிறு மூட்டை போல் மாற்றி கொள்ளவும்.

7)அந்த மூட்டையை சொத்தை பல் இருக்கும் இடத்தில் வைத்து வாயை வைத்து மூடி கொள்ளவும்.இப்படி செய்யும் பொழுது உமிழ் நீர் அதிகம் சுரக்கும்.அதனால் அதை விழுங்காமல் வெளியில் துப்பி விட வேண்டும்.இந்த மூட்டையை ஒரு 10 நிமிடம் வைத்திருந்தால் சொத்தை பல் வீக்கம்,குடைச்சல் சரியாகும்.இதை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் சொத்தை பல் வலியில் இருந்து விரைவில் விடுபட்டு விடலாம்.