இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

Photo of author

By Divya

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த செப்டம்பர் 2 அன்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது,அதை ஒழிக்க வேண்டுமென்று கூறினார்.இவரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு நாடு முழுவதும் இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள்,இந்து அமைப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் அமைச்சர் உதயநிதி தொடர்ந்து தற்பொழுது
திமுக எம்.பி ஆ.ராசா ‘இந்து’ மதம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் சாதி என்ற சர்வதேச நோய்க்கு இந்தியாவே காரணம்.சாதியை பயன்படுத்தி பொருளாதார ரீதியாகவும் மக்களை இந்தியா பிளவுபடுத்துகிறது.இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இவரின் இந்த வன்ம பேச்சுக்கு இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.ஊழலுக்கு பேர் போன திமுகவை சேர்ந்தவர்களுக்கு இந்து மதம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என்றும் ஆ.ராசா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாகவும் பலர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.