சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

0
140
#image_title

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

மழைக்காலம் அல்லது குளிர்காலம் எந்த காலமாக இருந்தாலும் சளி பாதிப்பு மட்டும் எளிதில் தொற்றிக் கொள்ள கூடிய நோய் பாதிப்பாக இருக்கிறது. இந்த சளி பாதிப்பை சரி செய்ய பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்திய முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சுக்கு

*மிளகு

*திப்பிலி

செய்முறை…

1)சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடியாக்கி கொள்ளவும்.

2)அடுப்பில் பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் சூடானதும் தயார் செய்து வைத்துள்ள பொடியில் 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

3)இதை 1 கிளாஸுக்கு வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து பருகவும். இவ்வாறு செய்தால் நெஞ்சி கட்டி இருந்த சளி கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

*தூதுவளை

*கண்டங்கத்திரி

*ஆடாதோடை இலை

*துளசி

செய்முறை…

1)தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடை, துளசி ஆகியவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.

2)ஒரு கிளாஸ் சூடு நீரில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்து வைத்துள்ள பொடியை கலந்து கொள்ளவும். அடுத்து 1 ஸ்பூன் தேன் கலந்து பருகவும்.

இந்த பானம் ஆஸ்துமா, நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.