மழைகாலங்களில் வரும் சளி, இருமல் பாதிப்பை 1 மணி நேரத்தில் சரி செய்ய உதவும் நாட்டு வைத்தியம்!!

0
156
#image_title

மழைகாலங்களில் வரும் சளி, இருமல் பாதிப்பை 1 மணி நேரத்தில் சரி செய்ய உதவும் நாட்டு வைத்தியம்!!

தமிழக்த்தில் தற்பொழுது பருவ மழைக்காலம் என்பதினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:-

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*தொண்டை வலி

*தொண்டை புண்

*நீஞ்சு அனத்தம்

*தலைவலி

*வறட்டு இருமல்

*உடல் சோர்வு

சளி, இருமல் பாதிப்பு உடனடியாக குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்:-

தேவையான பொருட்கள்:-

*மிளகு – 1/2 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1/2 தேக்கரண்டி

*சுக்கு – சின்ன துண்டு

*பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை…

ஒரு உரலில் 1/2 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு சேர்த்து இடித்துக் கொள்ளவும். பின்னர் 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதையை அதில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு இடித்த மிளகு, சீரகத்தை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இடித்த கொத்தமல்லி மற்றும் 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்க்கவும்.

சிறு துண்டு சுக்கு தட்டி அதில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை 1 டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இந்த பானத்தை காலை, மதியம், மாலை அல்லது இரவு என்று மூன்று வேலையும் பருகினால் சளி, இருமல் பாதிப்பு விரைவில் குணமாகும்.

Previous articleகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!!
Next articleதலையில் உள்ள வெள்ளை முடி சில மணி நேரத்தில் கருமையாக மாற இதை பயன்படுத்துங்கள்!!