மூட்டு வலியை மாயமாக்கும் வீட்டு வைத்தியம்..!!

Photo of author

By Divya

மூட்டு வலியை மாயமாக்கும் வீட்டு வைத்தியம்..!!

மூட்டு வலியால் வயதானவர்கள் மட்டும் இன்றி இளையத் தலைமுறையினரும் அவதிப்பட்டு வருவதை காண முடிகிறது. இந்த மூட்டு வலியை சரி செய்ய பல வைத்தியங்களை பார்த்தும் பலன் ஏதும் கிடைக்காமல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு இயற்கை வைத்தியத்தில் நல்ல தீர்வு இருக்கிறது.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*சுக்கு

*தண்ணீர்

செய்முறை…

1 துண்டு சுக்கை பொடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை 1/2 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு காலை, மாலை என இருவேளையும் மூட்டுகளில் பத்து போடவும். இவ்வாறு செய்து வந்தால் மூட்டு வலி, வீக்கம் குணமாகும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*முடக்கத்தான் இலை

*சீரகம்

*பிரண்டை இலை

செய்முறை…

இந்த மூன்று பொருட்களையும் 10 கிராம் என்ற அளவில் எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வர நாள்பட்ட மூட்டு வலி குணமாகும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*குபைக்கீரை

*முடக்கத்தான் கீரை

*சீரகம்

செய்முறை…

இந்த மூன்று பொருட்களையும் தேவையான அளவு எடுத்து கசாயம் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் மூட்டு வலி குணமாகும்.