உடல் கொழுப்பை குறைக்க உதவும் “தேன் + நெல்லிக்காய்”!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!
நம் உடலில் இரண்டு வகையான கொழுப்பு இருக்கிறது. ஒன்று நல்ல கொழுப்பு மற்றொன்று கெட்ட கொழுப்பு. இதில் கெட்ட கொழுப்பு உடல் பருமனை அதிகரித்து பல நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது.
இந்த கெட்ட கொழுப்பு உடலில் அதிகளவு உற்பத்தியாக காரணம் நாம் மேற்கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்கம் தான். அதுமட்டும் இன்றி புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணங்களாலும் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்க்கிறது.
இதை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேன் மற்றும் நெல்லிக்காயை பயன்படுத்துங்கள்.
1)பெரிய நெல்லிக்காய்
2)தேன்
ஒரு கப் அளவு பெரிய நெல்லிக்காய் எடுத்து விதை நீக்கி கொள்ளவும். பிறகு இதை வெயிலில் நன்கு வற்றல் போல் காயவைத்துக் கொள்ளவும்.
இந்த நெல்லிக்காய் வற்றலை தேனில் மூன்று நாட்கள் வரை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறும்.