மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!!
அதிக போதையில் பீடி கேட்டு தகராறு செய்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4- வது தெருவில் வசித்து வருபவர் கோபி என்ற கில்லா வயது 27. கோபி கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கோபி கொருக்குப்பேட்டைக்குச் சென்று தனது நண்பர்களுடன் இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் கோபி மட்டும் தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
அவர் கொடுங்கையூரில் குப்பை கிடங்கு எதிரே உள்ள ராஜரத்தினம் நகர் அரசு தொடக்கப்பள்ளி அருகே போதையில் தள்ளாடியபடி சென்றார். அங்கே அந்தப் பள்ளியின் சுற்றுச்சூழல் அதே பகுதியை சேர்ந்த சிவா வயது 55, மற்றும் எழில் நகரைச் சேர்ந்த ஜான்சன் வயது 24 ஆகிய இருவரும் குடிபோதையில் அமர்ந்து இருந்துள்ளார்கள்.
அப்போது அவர்களிடம் சென்ற கோபி பீடி தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கு வாக்குவாதம் முற்றியதால் கோபி திடீரென சிவாவை தாக்கி உள்ளார். இதனால் கடுமையான மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கடும் ஆத்திரம் அடைந்த ஜான்சனும், சிவாவும் சேர்ந்து கோபியை தாக்கி கீழே தள்ளியதோடு மட்டுமில்லாமல் அருகில் இருந்தால் ஆட்டு கல்லை தூக்கி தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
இந்த கொடூர சம்பவத்தில் கோபி தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் வரவே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிவா மற்றும் ஜான்சன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.