அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!! 

0
39
The peak of fear!! Annamalai condemned what the ministers did!!
The peak of fear!! Annamalai condemned what the ministers did!!

அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!! 

பாரதமாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். மேலும் அந்த அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அந்த அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலை நிறுவப்பட்டிருந்தது. ஆனால் அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி பாரதமாதா சிலை வைத்ததால் மாவட்ட தாசில்தார் கோட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் நேற்று இரவு பாஜக அலுவலகம் சென்று பாரதமாதா சிலையை அகற்றினர்.

இந்த சூழ்நிலையில் விருதுநகரில் வருகின்ற 9, 10, 11, ஆகிய தேதிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள நிலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பதிவில் கூறி இருப்பதாவது,

விருதுநகர் மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை காவல்துறையினர் சுவர் ஏறி  குதித்து இரவோடு இரவாக அப்புறப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில்,மாநிலத்தில்  கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்கு கூட உரிமை இல்லாத சூழ்நிலை  தற்போது நிலவி வருகிறது.

எனவேதான் ஊழல் அரசின் அவலங்களை எங்கள் கட்சியானது “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையின் மூலம் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பயத்தின் காரணமாக இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். பாரத அன்னையின் புகழ் ஓங்குக என்று அவர் தெரிவித்தார்.