இல்லத்தரசிகளே.. உங்களுக்கான 10 பயனுள்ள சமையல் குறிப்பு இதோ!

0
267
#image_title

இல்லத்தரசிகளே.. உங்களுக்கான 10 பயனுள்ள சமையல் குறிப்பு இதோ!

1)குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் சிறிது உருளைக்கிழங்கை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும்.

2)ரேசன் பாமாயிலில் உள்ள பித்தத்தை முறிக்க எலுமிச்சம் பழம் அளவு புளியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தவும்.

3)மீதமான சாதம் இருந்தால் அதை தூக்கி எரியாமல் அதை அரைத்து சீரகம், மிளகு, மிளகாய் தூள் சேர்த்து வடகம் தயார் செய்து பயன்படுத்தலாம்.

4)போண்டா, பஜ்ஜி செய்யும் பொழுது கடலை மாவில் சிறிது மைதா மாவு கலந்து சுட்டால் அதிக மொறு மொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

5)தேங்காய் தண்ணீரை ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

6)வெண்டைக்காய் சமைக்கும்போது ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன் வெண்டைக்காய் மீது சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

7)உப்புமா செய்யவதற்கு முன் ரவையை லேசாக வறுத்து செய்தால் உப்புமா உதிரியாக வரும்.

8)பூரி செய்ய பயன்படுத்தும் மாவில் சிறிது எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து பிசைந்தால் அதிக மிருதுவாக இருக்கும்.

9)சேமியா செய்வதற்கு முன் அதை குளிர்ந்த நீரில் போட்டு அலசி எடுத்து பின்னர் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

10)தக்காளி சட்னிக்கு அரைக்கும் பொழுது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து சேர்த்து அரைத்தால் அதிக மணத்துடன் இருக்கும்.