2 நிமிடத்தில் சொத்தை பல் வலி மற்றும் குடைச்சலை சரி செய்யணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

0
55
#image_title

2 நிமிடத்தில் சொத்தை பல் வலி மற்றும் குடைச்சலை சரி செய்யணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பலர் பல் வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்.காரணம் உணவு முறை மாற்றம்.அதனோடு முறையாக பல் துலக்காததும் முக்கிய காரணம் ஆகும்.உணவு உட்கொண்ட பின் வாயை தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.அதேபோல் காலையில் பல் துலக்குவது போல் இரவு உணவிற்கு பிறகும் பல் துலக்குவது அவசியம் ஆகும்.அதிகளவு இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது நல்லது.ஆனால் நம்மில் பலர் இதை முறையாக பாலோ செய்வதில் இதனால் நல்ல பற்கள் சொத்தையாக மாறி பல்வேறு குடைச்சல்களை நமக்கு தந்து வருகிறது.இதற்கு இயற்கை முறையில் எளிய தீர்வு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மிளகு – 20

*இலவங்கம் – 7

*தூள் உப்பு – 1/4 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
(அல்லது)
நல்லெண்ணெய்

செய்முறை:-

1.சிறிய உரல் ஒன்றில் மிளகு 20 மற்றும் இலவங்கம் 7 சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும் .

2.அதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ள வேண்டும்.

3.பிறகு 1/4 தேக்கரண்டி தூள் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

4.அதனோடு 1 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

5.இந்த கலவையை சிறிது எடுத்து சொத்தை பற்கள் மேல் வைக்கவும்.இப்படி செய்யும் பொழுது உமிழ் நீர் அதிகம் சுரக்கும்.எனவே உமிழ் நீரை விழுங்காமல் வெளியேற்றி கொண்ட இருக்க வேண்டும்.இப்படி செய்தால் பற்களில் இருக்கும் புழுக்கள் மற்றும் வலி நீங்கி விடும்.அதனோடு அடிக்கடி ஏற்ப்படும் குடைச்சல் பாதிப்பும் சரியாகி விடும்.

அதுமட்டும் அல்லாமல் தினமும் இரவு உணவு உண்ட பிறகு செய்து வைத்துள்ள கலவையை பேஸ்ட் போல் பிரஸில் தடவி பல் துலக்கினால் பற்களில் தேங்கி கிடைக்கும் கிருமிகள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.