ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின் பானம் தயாரிக்கும் முறை!!

0
1929
How to make Moringa resin drink that increases virility!!
How to make Moringa resin drink that increases virility!!

ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின் பானம் தயாரிக்கும் முறை!!

இன்றைய நவீன காலத்தில் ஆண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக விந்தணு குறைபாடு,விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கின்றது.இதனால் அவர்களின் திருமண உறவில் விரிசல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.இந்த பிரச்சனை குறித்து வெளியில் சொல்ல முடியாமலும் சரியான தீர்வு என்ன என்பது தெரியாமலும் மனம் மற்றும் உடல் ரீதியாக ஆண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.20 ஆண்டுகளாக தான் ஆண்களுக்கிடையே இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணங்களாக உணவு முறை மாற்றம்,மன அழுத்தம் உள்ளிட்டவை சொல்லப்படுகிறது.இதற்கு மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும் இயற்கை முறையில் முருங்கை பிசினை வைத்து விந்தனு குறைபாடு,விறைப்பு தன்மை குறைபாடு போன்றவற்றை சரி செய்ய இயலும்.

தேவையான பொருட்கள்:-

*முருங்கை பிசின்

*பால்

*கற்கண்டு

செய்முறை:-

முதலில் முருங்கை பிசின் 2 அல்லது 3 துண்டுகள் எடுத்து இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும்.பிறகு 1 டம்ளர் அளவிற்கு பால் காய்ச்சி அதில் இடித்து தூள் செய்து வைத்துள்ள முருங்கை பிசின் மற்றும் தேவைக்கேற்ப கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கி குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க மற்றொரு வழி

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் 7 லிருந்து 8 டம்ளர் வரை தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.பிறகு 3 முருங்கை பிசினை அதில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.பிறகு அடுத்த நாள் காலையில் பிசின் ஊறிய தண்ணீரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை என்று அன்று முழுவதும் குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

முருங்கை பிசின் பயன்கள்:-

இவை முருங்கை மரத்தின் பெருத்த தண்டுகளின் பகுதிகளில் இருந்து வெளியேற கூடிய பொருளாகும்.கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த பிசினில் அதிகளவு கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்டவை அடங்கியுள்ளது.இவற்றை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் உடலை வலுப்படுத்தி கட்டுக்கோப்பாக வைக்கும்.

மேலும் இவற்றை இடித்து உண்பதன் மூலம் மூட்டு வலி,மாதவிடாய் வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கையை
அதிகரிப்பு,மலட்டுத்தன்மை மற்றும் பெண்களுக்கு கருமுட்டை சார்ந்த பாதிப்புகள் நீங்கும்.இவ்வளவு பயன்களை உள்ளடக்கியுள்ள இந்த முருங்கை பிசின் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

Previous articleசர்க்கரை நோயா? கவலை வேண்டாம்… வாரத்திற்கு 3 முறை இந்த ஜூஸ் குடித்தாலே போதும்!
Next articleசளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி?