சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி?

0
60
சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி?

வீட்டில் செய்யும் மிளகு ரசத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. ரசம் என்றாலே நிறையே பேருக்கு பிடிக்கும். ரசம் ஜீரணத்திற்கு  நல்லது.

மேலும், மிளகு ரசம் குடித்தால் சளி, இருமல் கூட குணமாகும். நமக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் உடனே மிளகு ரசம் குடித்தால் போதும், சரியாகிவிடும்.

சரி எப்படி மிளகு ரசம் வைக்கலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்:

புளி : சிறிய எலுமிச்சை அளவு

தக்காளி : 2

மிளகு : 1/2 ஸ்பூன்

சீரகம் : 1/2 ஸ்பூன்

மஞ்சள் : 1/2 ஸ்பூன்

பூண்டு : 4 பல் (சிறியது)

கருவேப்பிலை : 2 கீற்று

கொத்தமல்லி இலை : ஒரு கைப்பிடி

கடுகு : ¼ டீஸ்பூன்

பெருங்காயம் : சிறிதளவு

உப்பு : தேவையான அளவு

எண்ணெய் : 3 ஸ்பூன்

செய்முறை :

முதலில், புளியை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், புளிக் கரைசலில் அரைத்த தக்காளி விழுது, கொத்தமல்லி சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில், அரைத்து வைத்த மிளகு சீரகக் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின்னர், அதில் மஞ்சள், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

கடைசியாக புளி கரைச்சலை ஊற்றி உப்பு சேர்க்க வேண்டும். ரசம் நுரை கூடி வரும்போது நெருப்பை அணைத்து விட வேண்டும். சுவையான மிளகு ரசம் ரெடி.

author avatar
Gayathri