பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் – தயார் செய்வது எப்படி?

0
293
#image_title

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் – தயார் செய்வது எப்படி?

குளிர்காலம் தொடங்கி விட்டால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். இதனால் உடலில் எரிச்சல், வெடிப்பு உண்டாகும். இந்த பாதிப்புகளை சரி செய்து குளிர்காலத்திலும் சருமத்தை அதிக மிருதுவாக வைத்துக் கொள்ள இந்த இயற்கை வாசிலினை தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

*தேன் மெழுகு – 30 கிராம்

*ஆலிவ் எண்ணெய் – 250 மில்லி

செய்முறை விளக்கம்…

முதலில் ஒரு பாத்திரத்தில் 30 கிராம் தேன் மெழுகு மற்றும் 250 மில்லி கிராம் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அந்த மேல் தேன் மெழுகு, எண்ணெய் ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை வைக்கவும்.

தேன் மெழுகு எண்ணையில் கரைந்து கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் எண்ணெயை ஆறவிட்டு ஒரு சிறிய டப்பாவில் ஊற்றி மூடி போட்டுக் கொள்ளவும்.

இவ்வாறு செய்தால் இயற்கை வாசலின் கெட்டியாகி விடும். பின்னர் இதை சருமத்தில் பூசி கொள்ளவும். தினமும் 2 முறை இந்த வாசிலினை தடவி வந்தோம் என்றால் சருமம் மிருதுவாக இருக்கும்.

இந்த வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட வாசலினை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.