மார்பில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை சட்டுனு கரைத்து வெளியேற்றும் “இஞ்சி + பூண்டு”.. எவ்வாறு பயன்படுத்துவது?

0
250
#image_title

மார்பில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை சட்டுனு கரைத்து வெளியேற்றும் “இஞ்சி + பூண்டு”.. எவ்வாறு பயன்படுத்துவது?

சாதாரண சளி பாதிப்பு.. கவனிக்க தவறும் பொழுது நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. இதை குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் அவை சுவாசம் தொடர்பாக பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற மூலிகை பானம் தயாரித்து குடிங்கள்.

1)எலுமிச்சை தோல்
2)இஞ்சி
3)பூண்டு
4)தேன்

ஒரு துண்டு இஞ்சி மற்றும் 2 பல் பூண்டை தோல் நீக்கி ஒரு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

எலுமிச்சம் பழத்தின் தோல் மட்டும் இரண்டு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சி, பூண்டை சேர்க்கவும். பிறகு எலுமிச்சை பழத் தோலை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து வந்த பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேவையான அளவு தேன் கலந்து குடிக்கவும். இந்த பானம் உடலில் தேங்கிய சளியை கரைத்து வெளியற்ற உதவும்.

1)வெற்றிலை
2)சுக்கு
3)பூண்டு
4)மிளகு

ஒரு துண்டு சுக்கு மற்றும் 2 பல் பூண்டை தோல் நீக்கி ஒரு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

அதேபோல் 3 அல்லது 4 மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்த சுக்கு, மிளகு, பூண்டை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து வந்த பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இந்த பானம் உடலில் தேங்கிய சளியை கரைத்து வெளியற்ற உதவும்.