இப்படி செய்தால் இந்த ஜென்மத்தில் ஆஸ்துமா பாதிப்பு நம்மை அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!
மனிதர்கள் பல நோய் பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.அதில் ஒன்று தான் ஆஸ்துமா.இவை சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக இருக்கிறது.இந்த நோய் பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாய்களை பெரிதும் பாதிக்கிறது.இதற்கு வறட்டு இருமல்,தீராத சளி பிரச்சனை உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த பாதிப்பை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.இதற்கு இயற்கை வழிகளை கடைபிடிப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
*இலவங்கம்(கிராம்பு) – 2
*கருப்பு மிளகு – 8
*கருந்துளசி இலை – 6
*தேன் – தேவையான அளவு
*இஞ்சி – 1 துண்டு
செய்முறை:-
முதலில் ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதில் 8 கருப்பு மிளகு,6 முதல் 8 கருந்துளசி இலைகள்,2 கிராம்பு (இலவங்கம்),மற்றும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை சேர்த்து கொள்ளவும்.
பின்னர் இதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.அடுத்து அடுப்பை அணைத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.பின்னர் அதில் தேவையான அளவு தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
தீர்வு 2:-
தேவையான பொருட்கள்:-
*பால் – 1 டம்ளர்
*மிளகு – 4
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*பூண்டு – 2
*பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் 2 பல் பூண்டு எடுத்து அதனை தோலை நீக்கி இடித்துக் கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து 4 அல்லது 5 மிளகு எடுத்து உரலில் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் இடித்த பூண்டு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.
அடுத்ததாக மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.
பிறகு ஒரு டம்ளர் எடுத்து அதில் 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளவும்.பிறகு காய்ச்சி வைத்துள்ள பாலை சேர்த்து நன்கு கலந்து பருகவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் ஆஸ்துமா பாதிப்பு விரைவில் சரியாகும்.