அதிகப்படியான உடல் சூடு இருப்பவர்கள் இந்த இயற்கை வழியை பின்பற்றி தப்பித்து கொள்ளுங்கள்!!

0
29
#image_title

அதிகப்படியான உடல் சூடு இருப்பவர்கள் இந்த இயற்கை வழியை பின்பற்றி தப்பித்து கொள்ளுங்கள்!!

உடல் உஷ்ணம்(உடல் சூடு) என்பது ஆண்கள்,பெண்கள் என அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை ஆகும்.இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காய்ச்சல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.அதிக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் கூட உடல் சூடு பிரச்சனை ஏற்படும்.

உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்களுக்கு பருக்கள்,சருமம் வறண்டு போதல் மற்றும் ஆண்களுக்கு விந்து குறைபாடு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.உடல் சூடு குறைய வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம்.அதேபோல் அதிகளவு தண்ணீர் அருந்துவதும் அவசியம் ஆகும்.உடல் சூடு குறைய சில இயற்கை வழிகளை பின்பற்றினால் விரைவில் அந்த பாதிப்பு சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

*சுரைக்காய் – 1 கப்

*தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

முதலில் 1 சுரைக்காயை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதன் விதைகளை நீக்கி 10 துண்டுகளாக (சிறு துண்டுகள்) நறுக்கி கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.பின்னர் 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகவும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து பருகி வந்தோம் என்றால் உடல் சூடு முழுமையாக வெளியேறி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*நல்லெண்ணெய் – 1 கரண்டி

*கருப்பு மிளகு – 4

*பூண்டு – 2 பற்கள் (நறுக்கியது)

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் எடுத்து வைத்துள்ள நல்லெண்ணெய் 1 கரண்டி சேர்த்து கொள்ளவும்.பின்னர் இதை மிதமான தீயில் சூடு படுத்தவும்.

அடுத்து 2 பல் பூண்டு எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.இதை சிறு சிறு’துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நல்லெண்ணெயில் சேர்க்கவும்.

அடுத்து அதிக மருத்துவ குணம் கொண்ட கருப்பு மிளகு நன்கு எடுத்து அதில் சேர்த்து சிறிது நேரம் பொரிய விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த நல்லெண்ணய் கலவையை நன்கு ஆற விடவும்.பின்னர் இந்த நல்லெண்ணெயை இரு கால்களின் கட்டை விரல்களில் ஊற்றி சிறிது நேரம் நன்கு தேய்க்கவும்.இப்படி செய்த அடுத்த 5 நிமிடத்தில் உடலில் உள்ள சூடு அனைத்தும் வெளியேறுவதை நன்கு உணர முடியும்.

உடலில் உள்ள சூட்டை தணித்து உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுப்பதில் நல்லெண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது.அதேபோல் அதிக மருத்துவ குணம் கொண்ட மிளகும் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.உடல் சூட்டை குறைக்க நினைப்பவர்கள் இந்த முறையை கடைபிடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.