பழைய சோற்றில் இதை சேர்த்து குடித்தால் அல்சர் எந்த ஜென்மத்திலும் உங்க கிட்ட நெருங்காது!

பழைய சோற்றில் இதை சேர்த்து குடித்தால் அல்சர் எந்த ஜென்மத்திலும் உங்க கிட்ட நெருங்காது!

நம்மில் பலர் காலை உணவு என்ற ஒன்றை மறந்து விடுகின்றோம். காரணம் வேலைப்பளு, இதர வேலைகளில் கவனம் செலுத்துவதால் தான் உணவை தவிர்க்கும் நிலை ஏற்படுகிறது.

சிலர் உடல் எடையை குறைக்க உணவை தவிர்க்கின்றனர். ஆனால் உண்மையில் உணவை தவிர்ப்பதால் உடை எடை குறையாது. அல்சர், வாய்ப்புண், வயிறு எரிச்சல், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை தான் சந்திக்க நேரிடும்.

அதிலும் அல்சர் ஏற்பட்டு விட்டால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை சொல்ல வார்த்தை இல்லை. இந்த அல்சரை குணமாக்க பழைய சாதம் சிறந்த தீர்வாகும்.

குளிர்ச்சி நிறைந்த பழைய சாதத்தை காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர், உடல் சூடு போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பழைய சாதம் – கப்
2)சின்ன வெங்காயம்(நறுக்கியது) – 2 தேக்கரண்டி
3)உப்பு – தேவையான அளவு
4)வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி
5)கொத்தமல்லி தழை – சிறிதளவு
6)தயிர் – 1/4 கப்

செய்முறை:-

ஒரு கப் பழைய சாதத்தில் 2 தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதன் பிறகு சிறிதளவு கொத்தமல்லி தழையை நறுக்கி அதில் போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி அளவு வெந்தயத் தூள் சேர்த்து கலக்கவும். பிறகு 1/4 கப் அளவு தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் எளிதில் ஆறிவிடும்.