தினமும் குடிக்கும் பாலில் மஞ்சள் சேர்த்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
நம்மில் பலர் தினமும் பால் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். டீ, காபி அருந்துவதை தவிர்த்து பால் அருந்துவதை வழக்கமாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பாலில் மஞ்சள் சேர்த்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் பலனோ அதிகம்.
பாலில் உள்ள சத்துக்கள்:-
*புரதம்
*கால்சியம்
*வைட்டமின் பி, சி, டி
மஞ்சளில் உள்ள சத்துக்கள்:-
*குர்க்குமின்
*ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள்
*ஆன்டி- ஏஜிங்
பாலில் மஞ்சள் சேர்த்து பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
1)இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சளை பாலில் கலந்து பருகினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
2)மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள் உடலில் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது.
3)நினைவாற்றலை அதிகரிக்க மஞ்சள் கலந்த பால் சிறந்த தீர்வாக இருக்கிறது.
4)இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மஞ்சள் கலந்த பால் பெரிதும் உதவுகிறது.
5)செரிமானக் கோளாறால் அவதிப்பட்டு வரும் நபர்கள் மஞ்சள் கலந்த பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.
6)எலும்பு தொடர்பான பாதிப்பை சரி செய்வதில் மஞ்சள் கலந்த பாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
7)சளி, இருமல் பாதிப்பு இருக்கும் நபர்கள் சூடான பாலில் மஞ்சள் கலந்து பருகினால் உடனடி பலன் கிடைக்கும்.
8)தொண்டை புண், தொண்டை வலி இருக்கும் நபர்கள் மஞ்சள் கலந்த பாலை பருகுவது நல்லது.
9)அதேபோல் கஸ்தூரி மஞ்சள் சரும பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இதை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகம் பொலிவாகவும், சுருக்கங்கள் இன்றியும் காணப்படும்.