இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!

0
232
#image_title

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!

சளி தொந்தரவுக்கு மருந்து இல்லாத தீர்வு வீட்டு வைத்தியத்தில் உள்ளது. சளி பிடித்து எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த பானம் நிமிடத்தில் அடைபட்டு கிடந்த சளியை கரைத்து வெளியேற்றி விடும்.

இஞ்சி, இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய பொருட்களை வைத்து கசாயம் செய்து குடித்தால் சளி பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும். இந்த பொருட்களை வைத்து எவ்வாறு கசாயம் செய்யலாம் என்ற செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

1)இலவங்கபட்டை – 1

2)இஞ்சி – 1 துண்டு

3)மஞ்சள் – சிறிதளவு

4)மிளகு – 4

பானம் செய்யும் முறை…

*அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்துக் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

*பிறகு ஒரு உரலில் 1 துண்டு பட்டை, இஞ்சி துண்டு மற்றும் மிளகு போட்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.

*இதை சூடாக்கி கொண்டிருக்கும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*பட்டை கலவை நன்கு கொதித்து வரும் சமையத்தில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.

*தங்களுக்கு தேவைப்பட்டால் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து குடிக்கலாம். வெள்ளை சர்க்கரை, வெல்லம் போன்ற இனிப்பு பொருட்களை சேர்த்து குடித்தால் பலன் கிடைக்காது.

Previous articleமூட்டு வலி, கை – கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்!
Next articleகடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!