இப்படி செய்தால் 1 வருடம் ஆனாலும் வெங்காயம் கெடாது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
100
#image_title

இப்படி செய்தால் 1 வருடம் ஆனாலும் வெங்காயம் கெடாது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

வெங்காயம் விலை குறைவாக இருக்கும் பொழுது வாங்கி முறையாக பராமரித்தல் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும். வெங்காயத்தில் அழுகிய வாசனை வராமல், அவை கெடாமல் பராமரிக்க எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

1)நாம் வெங்காயம் வாங்கும் பொழுது அதிக கவனத்துடன் வாங்க வேண்டும். வெங்காயத்தில் கீறல், அழுகல் இருக்கக் கூடாது. அதேபோல் ஒரு சில வெங்காயத்தின் தோலை உரித்தால் ஒரு வித கருப்பு மை இருப்பது போல் காணப்படும். அதுபோன்ற வெங்காயத்தை வாங்கக் கூடாது.
இவ்வாறு பார்த்து வாங்கினால் வெங்காயம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

2)அதேபோல் வாங்கிய வெங்காயத்தை அவ்வப்போது கவனிக்க வேண்டும். அழுகிய அல்லது அழுகும் நிலையில் இருக்கும் வெங்காயத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மற்ற நல்ல வெங்காயங்களும் விரைவில் அழுகி பயன்படுத்த முடியாதபடி மாறிவிடும்.

3)வெங்காயத்தை வாங்கி வந்ததும் அதை குறைந்தது 2 மணி நேரம் வெயிலில் வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து காய்கறி ஸ்டார் பண்ணும் கூடைகளில் வைக்கவும்.

4)அதேபோல் வாங்கிய வெங்காயத்தை ஈரம் இல்லாத கூடை, ஜல்லடை அல்லது தாம்பூலத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வெங்காயம் அழுகிப் போகாமல் இருக்கும். வெங்காயத்திற்குள் காற்று போகும் படி தான் வைக்க வேண்டும். கவர் கொண்டு மூடிவிடக் கூடாது. காற்றோட்டம் இருந்தால் தான் வெங்காயம் அழுகாமல் இருக்கும்.

5)விலை குறிக்கவாக இருக்கும் சமையத்தில் அதிகப்படியான வெங்காயத்தை வாங்கி சேமித்து வைக்கின்றோம். ஆனால் அது பராமரிப்பு இன்றி உடனே அழுகும் நிலைக்கு வந்து விடுகிறது. எனவே வெங்காயத்தை நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்த வேண்டுமென்றால் மாதத்திற்கு ஒரு முறை அதை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வெங்காயம் நீண்ட நாட்களுக்கு வரும்.

Previous articleமூட்டு வலி? 7 நாட்களில் குணமாக இதை செய்யுங்கள்!! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!
Next articleவாயை திறந்தாலே துர்மாற்றம் வீசுகிறதா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!!