வாயை திறந்தாலே துர்மாற்றம் வீசுகிறதா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

0
50
#image_title

வாயை திறந்தாலே துர்மாற்றம் வீசுகிறதா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பெரும்பாலானோர் வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம். காரணம் வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம். ஒரு சிலருக்கு பல் துலக்கினாலும், துலக்காவிட்டாலும் இந்த பிரச்சனை அவர்களை பின் தொடர்ந்து வருகிறது. இந்த வாய் துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறோம்.

சொத்தைபி[ப்பல், வாய்ப்புண், வயிற்று கோளாறு, வயிற்று புண் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இந்த வாய் துர்நாற்ற பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்சனையை இயற்கை முறையில் சுலபமாக போக்கிவிட முடியும்.

தேவையான பொருட்கள் :-

*பல் துலக்க பயன்படும் பேஸ்ட் – தேவையான அளவு

*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை

*கிராம்பு – 5

*ரோஸ் வாட்டர் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தினமும் பல் துலக்க உபயோகிக்கும் பேஸ்டில் சிறிதளவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு உரலில் 5 கிராம்பு போட்டு இடித்து கொள்ளவும். இதை பேஸ்ட் கலக்கி வைத்துள்ள பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1/2 சிட்டிகை அளவு மஞ்சள் மற்றும் 1/2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஆகியவற்றை அந்த பவுலில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும்.

பின்னர் ஊற வைத்துள்ள கலவையை வைத்து வாயை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாள்பட்ட வாய் துர்நாற்றம் விலகி வாய் மணக்க தொடங்கும்.