இதை செய்தால் ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகிவிடும்!!

இதை செய்தால் ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகிவிடும்!!

நம்மில் பலர் வேலை பளு காரணமாக காலை உணவு உண்பதையே மறந்து வருகிறோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

வயிற்றுப் புண் ஏற்படக் காரணம்:-

*ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம்

*உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை

வயிற்றுப் புண் அறிகுறி:-

*அடிவயிற்று வலி

*குமட்டல்

*வயிறு உப்பசம்

*கருப்பு நிற மலம்

*திடீர் எடை குறைவு

*புளித்த ஏப்பம்

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக எளிய வழிகள் இதோ:-

1)அகத்தி கீரை சூப்

அகத்தி கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள அகத்தி கீரை, இரண்டு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கையளவு துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பின்பு அகத்தி கீரை சூப்பை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

2)அருகம்புல் ஜூஸ்

தேவையான அளவு அருகம்புல் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

3)மணத்தக்காளி கீரை சூப்

மணத்தக்காளி கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மணத்தக்காளி கீரை, இரண்டு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கையளவு துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பின்பு மணத்தக்காளி கீரை சூப்பை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.