இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

0
209
#image_title

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

இன்றைய உலகில் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருப்பது கடன். தெரிந்தோ… தெரியாமலோ கடனில் சிக்கி விட்டு பின்னர் அதை அடைக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

வாங்கிய கடன் குறைவு என்றாலும் அதற்கு வட்டி கட்டுவது தான் மிகவும் கடிமனான ஒன்று. முன்பெல்லாம் வட்டி மட்டும் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது வட்டியில் நாள் வட்டி, வர வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என பல வட்டி வந்து விட்டது.

இருந்தும் பணத் தேவையால் கடன் வாங்கும் சூழலுக்கு பலர் தள்ளப்பட்டு விடுகின்றனர். கடன் வாங்கி நீண்ட வருடங்கள் ஆகியும் வட்டி மட்டும் தான் கட்ட முடிகிறது… அசல் பணத்தை கொடுக்க முடியவில்லை என்று வருத்தமடையும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய் கிழமையன்று செய்து வரவும்.

செவ்வாய் கடன் அடைக்க உகந்த நாள்.. இந்த நாளில் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் வாங்கிய கடன் கோடி என்றாலும் அதை அடைக்க வழி பிறக்கும்.

இதற்கு முதலில் வீட்டு பூஜை அறையில் அம்மன் படம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். தங்களுக்கு விருப்பமான அம்மன் படமாக இருந்தாலும் சரி..

அம்மன் படத்திற்கு முன் ஒரு பித்தளை தட்டு வைத்து அதில் சிறிது குண்டுமல்லி பூ வைக்கவும். இந்த பூக்களுக்கு நடுவில் ஒரு ஒரு மஞ்சள் துண்டு வைத்து அதற்கு குங்குமத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு ஒரு மண் அகல் வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும். வாங்கிய கடன் அனைத்தும் அடைந்து விட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். முடிந்தவர்கள் அம்மனுக்கு உகந்த நெய்வேத்தியம் தயார் செய்து படைக்கலாம். இந்த வழிபாட்டை செவ்வாய் கிழமையில் எந்த நேரத்திலும் செய்யலாம்.

தொடர்ந்து செவ்வாய் அன்று செய்து வர வாங்கிய கடனை அடைக்க வழி பிறக்கும்.