வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

0
137
#image_title

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

உண்ட உணவு சேர்த்து அதில் இருந்து தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் எளிதில் செரிக்காத உணவு, உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவு, செரிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் உணவு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் வயிற்று பகுதியில் உப்பசம் ஏற்படும்.

இதனால் மந்த நிலை அதிகம் ஏற்படும். செரிக்காத உணவால் செரிமான மண்டலம் விரைவில் ஆற்றலை இழந்து விடும். வயிறு உப்பசம் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்சிக்கவும்.

*எலுமிச்சை சாறு
*இஞ்சி
*பட்டை
*புதினா இலை

ஒரு கிளாஸில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு ஊற்றி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1 துண்டு இஞ்சி, 1 பட்டை துண்டு, 2 புதினா இலை சேர்த்து 1 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு அதில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து குடிக்கவும். இவ்வாறு செய்தால் வயிறு உப்பசம் சரியாகும்.

*தண்ணீர்
*சுக்கு
*தேன்
*சீரகம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அவை சூடானதும் 1 துண்டு சுக்கு, 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்தால் வயிறு உப்பசம் பிரச்சனை நிரந்தரமாக சரியாகும்.