இதை செய்தால் சொத்தை பல் வலி 2 நிமிடத்தில் சரியாகி விடும்!!

Photo of author

By Divya

இதை செய்தால் சொத்தை பல் வலி 2 நிமிடத்தில் சரியாகி விடும்!!

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல் சொத்தை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாரார்கள். பல் நம் உடலில் முக்கிய உறுப்பு ஆகும்.

உணவுப் பொருட்களை அரைத்து உடலுக்கு அனுப்பி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவை உடனே விழுங்காமல் பற்களால் நன்கு அரைத்து விழுங்க வேண்டும். அப்பொழுது தான் உணவுக் குழாய் சீராக செயல்படும்.

அதேபோல் நம் முக அழகை கூட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த பற்களை முறையாக பராமரிக்காமல் விட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பல் சொத்தை ஏற்படக் காரணம்:-

*அதிகப்டியான இனிப்பு உட்கொள்ளுதல்

*முறையாக பல் துலக்காதது

*உணவு உண்ட பின் வாயை சுத்தம் செய்யாதது

சொத்தைப் பல்லால் ஏற்படும் பாதிப்புகள்:-

*பல் கூச்சம

*ஈறுகளில் வலி

*பல் வீக்கம்

*பல் குடைச்சல்

*வாய் துர்நாற்றம்

பல் சொத்தை பிரச்சனை நீங்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*கொய்யா இலை

*மிளகு

*கல் உப்பு

செய்முறை:-

முதலில் 2 தேக்கரண்டி மிளகு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 2 கொய்யா இலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை மிளகு தூள் இருக்கும் கிண்ணத்தில் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் தூள் உப்பு 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்து சிறு துளி தண்ணீர் சேர்த்து குழப்பி கொள்ளவும்.

பின்னர் இதை சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வைக்கவும். அதேபோல் பல் கூச்சம் இருப்பவர்கள் பல் துலக்கும் பிரஷில் இந்த கலவையை சேர்த்து நன்கு பற்களை துலக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சொத்தை பல் வலி நீங்கும்.