வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!

0
56
#image_title

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!

நவீன காலத்தில் தொலைக்காட்சி,மடிக்கணினி,கைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.இது ஒருபுறம் நமக்கு பல தகவல் தெரிந்து கொள்வதற்கு பயன்படுகிறது என்றாலும் இதை அதிக நேரம் பார்ப்பதால் கண் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.நமது உடலில் முக்கிய உறுப்பு கண்.இதை ஆரோக்கியமாக,எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

கண் ஆரோக்கியம் மேம்பட தினமும் உட்கொள்ள வேண்டிய 5 உணவு வகைகள்:-

*கண்புரை மற்றும் முதுமையில் உண்டாகும் மாகுலர் சிதைவு பாதிப்பு வராமல் இருக்க தினமும் ஊறவைத்த பாதம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா உள்ளிட்ட பருப்பு வகைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.

*கண் அரிப்பு,கண் வறட்சி,கண் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் இருக்க
கீரையை தினமும் உட்கொள்வது அவசியம்.கீரை வகைகளில் லுடீன்,பீட்டா கரோட்டின், குளோரோபிலின்,சாந்தீன்,ரிபோஃப்ளேவின் மற்றும் தியாமின் போன்ற ஆக்சிஜனேற்றிகள் அதிகம் இருக்கிறது.

*கண்களின் விழித்திரையில் ஏற்படும் சேதம்,கண்புரை,கிளைக்கோமா உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பிக்க தினமும் பப்பாளி பழம் சாப்பிட வேண்டும்.இதில் வைட்டமின்கள் ஏ,சி மற்றும் ஈ நிறைந்து இருக்கிறது.அதேபோல் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் இருக்கிறது.

*கண்களின் காணப்படும் சிறிய இரத்த நாளங்களை வலுவாக்க கடல் மீன் வகைகளை உணவில் எடுத்து கொள்வது நல்லது.இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது.

*கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு, மாலைக் கண் மற்றும் கண்புரை ஆகியவை ஏற்படாமல் இருக்க தினமும் உணவில் கேரட்டை சேர்த்து கொள்வது அவசியம்.இதில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.