இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

Photo of author

By Divya

இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

நம்மில் பலர் தீராத நெஞ்சு சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சாதாரண உருவாகும் சளி மார்பில் தேங்கி நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது.

நெஞ்சு சளிக்கான அறிகுறி:-

அதிக சளி, வறட்டு இருமல், தும்மல், நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு
இளைப்பு மற்றும் உடல் சோர்வு, காய்ச்சல் வருவது போல் உணர்வு, தலைவலி மற்றும் தலை பாரம், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு மற்றும் மூச்சிவிடுவதில் சிரமம்.

இதை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கசாயம் செய்து பருகுவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

**இஞ்சி

**பூண்டு

**மஞ்சள்

**கருந்துளசி

**மிளகு

**சீரகம்

கசாயம் செய்யும் முறை…

முதலில் 1/4 கப் கருந்துளசி இலைகளை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் சிறு துண்டு இஞ்சி மற்றும் பூண்டு பல்லை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள துளசி விழுது, நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு, 1/4 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை கிளாஸுக்கு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும். இவ்வாறு செய்தால் நெஞ்சில் தேங்கி கிடந்த நாள்பட்ட சளி முழுவதும் வெளியேறி விடும்.