சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
65
#image_title

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி உணவு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகளும், புதிதான நெல் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உண்ணப்பட்டு வருகிறது.

அரசி சாதத்தில் இருக்கும் சத்துக்களை விட அதன் கஞ்சி தண்ணீரில் தான் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கிறது. சிலருக்கு இந்த கஞ்சி தண்ணீர் குடிப்பது என்றால் அலாதி பிரியமாக இருக்கும். இந்த கஞ்சி தண்ணீர் மலச்சிக்கல் முதல் தலை முடி வளர்ச்சி வரை அனைத்திற்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.

**சதாம் வடித்த கஞ்சி தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு முற்றிலும் சரியாகி விடும்.

**உடல் உஷ்ணம் இருப்பவர்கள் தினமும் காலையில் கஞ்சி தண்ணீர் அருந்தலாம்.

**சிறுநீரகம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படும் நபர்களுக்கு கஞ்சி தண்ணீர் அருந்துவது சிறந்த தீர்வாக இருக்கும்.

**தலை முடி வளர்ச்சிக்கு கஞ்சி தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கும். சீகைக்காய் தூள், அரப்பு உள்ளிட்ட வற்றுடன் தேவையான அளவு கஞ்சி தண்ணீர் கலந்து தலைக்கு உபயோகித்து குளித்து வருவதன் மூலம் தலை முடி அடர்த்தியாக வளரும்.

**அதேபோல் தலை முடி உதிர்வு, வறட்சி, இளநரை உள்ளிட்டவைகளுக்கு இவை சிறந்த தீர்வாக இருக்கும்.

**சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை மூட்டுகளின் மேல் தடவி மஜாஜ் செய்து வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி குணமாகும்.

**குதிகால் வலியால் அவதிப்படும் நபர்கள் சூடான கஞ்சி தண்ணீரில் கால்களை வைத்து எடுத்தால் நல்லபலன் கிடைக்கும்.

**முக பருக்கள், கரும்புள்ளிகள், சரும வறட்சி இருக்கும் நபர்கள் கஞ்சி தண்ணீரை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

**துவைத்த துணிகளை அலசும் தண்ணீரில் தேவையான அளவு கஞ்சி சேர்த்து அலசினால் துணிகள் நிறம் மாறாமல், புதிது போன்று காட்சியளிக்கும்.

**கர்ப்பிணி பெணகள் கஞ்சி தண்ணீரில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பருகினால் சுகப் பிரசவம் உண்டாகும்.

**பால் சூடுபடுத்திய பாத்திரம், அடிபிடித்த பாத்திரம், எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்களை கஞ்சி தண்ணீரில் ஊற வைத்து துலக்கினால் பாத்திரங்களில் ஏற்படும் துர்நாற்றம் அகலும்.