குடலில் இறுகிய மலம் இளகி வரும்.. இதை ஒரு கிளாஸ் குடித்தால்..!

Photo of author

By Divya

குடலில் இறுகிய மலம் இளகி வரும்.. இதை ஒரு கிளாஸ் குடித்தால்..!

தினமும் மலம் கழிக்காமல் இருந்தால் அவை குடலில் தேங்கி பல தொந்தரவுகளை கொடுக்கும். நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு… அதில் இருந்து ஒதுக்கப்படும் தேவையற்ற கழிவுகள் மலமாக வெளியேற்றப்படுகிறது.

ஆனால் எளிதில் செரிக்காத உணவை உட்கொண்டால் அவை மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

இதற்கு தீர்வு…

தேவையான பொருட்கள்…

1)கடுக்காய் பொடி
2)வெந்தயப் பொடி
3)தண்ணீர்

செய்முறை…

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய கடுக்காய் அல்லது கடுக்காய் பொடி வாங்கிக் கொள்ளவும்.
கடுக்காய் வாங்கினால் அதை அரைத்து பொடி செய்து கொள்ளவும். மலச்சிக்கலை போக்குவதில் கடுக்காய்க்கு ஈடு இணையில்லை.

அதேபோல் வெந்தயமும் சிறந்த மலமிளக்கியாக செயல்படும். வெந்தயம் சிறிது எடுத்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

அதற்கு அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

இந்த நீரில் கடுக்காய் பொடி மற்றும் வெந்தயப் பொடி சேர்த்து காலை உணவிற்கு முன்னர் குடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். இந்த பொடியுடன் சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடித்தால் நிமிடத்தில் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைத்து விடும்.

வயிற்றில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் வெளியேறிய பின்னர் மோர் அல்லது இளநீர் போன்ற குளிர்ச்சி பொருட்களை உட்கொள்ளவும். இந்த பானத்தை பருகிய பின்னர் காலை உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

குடலில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின்னரே உணவு அருந்த வேண்டும்.