தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

Photo of author

By Divya

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு,அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பார்வை திறன் குறைகிறது.

இதனால் தான் கிட்டப்பார்வை,தூரப்பார்வை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பிரச்சனையை சரி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன்
2)கசகசா ஒரு ஸ்பூன்
3)பாதாம் பருப்பு ஐந்து
4)வெள்ளை கற்கண்டு ஒரு துண்டு
5)பால் ஒரு டம்ளர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 5 பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் கசகசா சேர்த்து மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பெருஞ்சீரகம் மற்றும் கசகசாவை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பின்னர் ஊறவைத்த பாதாம் பருப்பை தோல் நீக்கி விட்டு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.அதனோடு ஒரு துண்டு கற்கண்டு மற்றும் காய்ச்சாத பால் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.இதன் பிறகு அரைத்த பாதாம் பேஸ்ட் மற்றும் பெருஞ்சீரகம் கசகசா பொடி சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடிக்கவும்.இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் கண் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.