இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!

0
167
#image_title

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் பாதிப்பை சிறியவர்கள் கூட சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. உணவுமுறையில் கடப்பாடு இல்லாமல் போனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இவ்வாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி
2)மிளகாய் தூள்
3)பூண்டு
4)உப்பு
5)தண்ணீர்

தக்காளி சூப் செய்முறை:-

முதலில் ஒரு தக்காளி பழத்தை தண்ணீரால் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். அடுத்து 3 பல் பூண்டை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தக்காளி பழம், உரித்த பூண்டு, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரைத்த தக்காளி கலவையை ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாடை நீங்கி வரும் அளவிற்கு மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

அதன் பின்னர் தேவையான அளவு உப்பு எடுத்து கொதிக்கும் தக்காளி சூப்பில் போட்டு கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து தக்காளி சூப்பை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி குடிக்கவும்.

இவ்வாறு வாரம் இருமுறை தக்காளி சூப் செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து
2)வெங்காயம்
3)கேரட்
4)குடை மிளகாய்
5)உப்பு

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சூப் செய்முறை:-

முதலில் ஒரு ஸ்பூன் கருப்பு உளுந்தை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு பெரிய வெங்காயம் பாதி எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் ஒரு கேரட், 1 குடை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் சூடானதும் ஊறவைத்துள்ள கருப்பு உளுந்து சேர்த்து வேக வ விடவும்.

அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்க்கவும்.

காய்கறிகள் அனைத்தும் நன்கு வெந்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

பிறகு சூப்பை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி குடிக்கவும். இவ்வாறு வாரம் இருமுறை சூப் செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.