வெயில் காலத்தில் இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்!!

0
345
#image_title

வெயில் காலத்தில் இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்!!

கோடை காலத்தில் உடல் சூடு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.இதனால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படும்.எனவே முடிந்தவரை உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வெயில் காலத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது.அதிலும் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை தண்ணீரில் போட்டுக் குடிப்பது இன்னும் நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)குங்கும பூ
2)கறிவேப்பிலை
3)வெந்தயம்

செய்முறை:-

ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி 3 குங்கும பூ,ஒரு கொத்து கறிவேப்பிலை,1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து ஒரு இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் இந்த நீரை குடித்து வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும்.இவ்வாறு செய்தால் உடலில் உள்ள சூடு தணியும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)பெருஞ்ஜீரகம்
3)சப்ஜாவிதை

செய்முறை:-

ஒரு கிளாஸ் நீரில் 1/4 தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி சப்ஜா விதை சேர்த்து ஒரு இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் உடலில் உள்ள மொத்த சூடும் தணியும்.

Previous articleமத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பாஜக!!
Next articleKerala Recipe: கேரளா ஸ்டைல் மணக்கும் பூண்டு தொக்கு – சுவையாக செய்வது எப்படி?