இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

0
116
#image_title

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கிவிடுகிறது. இதை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

*கட்டி பெருங்காயம்
*ஓமம்
*சீரகம்

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிது கட்டி பெருங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதில் ஒரு 1/2 சீரகம் மற்றும் 1 ஸ்பூன் ஓமம் சேர்த்து 1 நிமிடம் வரை குறைவான தீயில் வைத்து வறுத்து ஆற வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு அரைத்த பொடியை சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் 5 நிமிடத்தில் வெளியேறி விடும்.

*உப்பு
*தண்ணீர்

ஒரு கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் தூள் உப்பு சேர்த்து காலை நேரத்தில் அருந்தினால் வயிற்றில் தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் வெளியேறும்.

*கிராம்பு
*பெருங்காயத் தூள்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் நீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் 3 அல்லது 4 கிராம்பு சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து வடிகட்டி அருந்தினால் வாயுக்கள் அகலும்.