இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

Photo of author

By Divya

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

1)கொத்தமல்லி விதை

இதை அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி, உடல் சோர்வு நீங்கும்.

2)பட்டை

ஒரு துண்டு பட்டையை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும்.

3)புதினா

இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.

4)செண்டுமல்லி

இந்த பூவை உலர்த்தி பொடியாக்கி தேநீர் செய்து குடிப்பதினால் கல்லீரல் பலப்படும்.

5)முருங்கை பூ

இதை பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

6)மஞ்சள்

மஞ்சள் கிழங்கை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள தொற்று கிருமிகள் அழியும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

7)பூண்டு

சிறிது பூண்டு பற்களை நெருப்பில் சுட்டு பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

8)பெரு நெல்லிக்காய்

விதை நீக்கிய பெரு நெல்லிக்காயை உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.