உலர் அத்திப் பழத்தின் மகிமை தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிட ஆரமித்து விடுவீர்கள்!!

0
29
#image_title

உலர் அத்திப் பழத்தின் மகிமை தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிட ஆரமித்து விடுவீர்கள்!!

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்களில் ஒன்று அத்தி. இந்த பழத்தில் அதிகப்டியான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பழத்தை உலர்த்தி சாப்பிட்டால் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும்.

உலர் அத்திப் பழத்தில் இருக்கும் நன்மைகள்:-

பொட்டாசியம், ஜிங்க், மாங்கனீஸ், புரோட்டீன், கால்சியம், சர்க்கரை சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே மற்றும் இரும்புச்சத்து.

தினமும் ஒரு உலர் அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அலாதி நன்மைகள்:-

1)தினமும் ஒரு உலர் அத்திப்பழம் சாப்பிடுவதால் கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

2)தினமும் இரவில் உலர் அத்திப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும்.

3)சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாக தினமும் உலர் அத்திப்பழம் சாப்பிட்டு வரலாம்.

4)ஆஸ்துமா, உடல் சோர்வு, வலிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உலர் அத்திப்பழம் உரிய தீர்வாக இருக்கும்.

5)மூல நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் தினமும் உலர் அத்தி பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

6)உலர் அத்தியில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் கே மற்றும் மெக்னீசியம் உள்ளிட்டவைகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

7)பித்தம், வாதம் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்களுக்கு உலர் அத்தி சிறந்த தீர்வாக இருக்கும்.

8)இரத்த சோகை பாதிப்பு குணமாக இரவில் 2 அல்லது 3 உலர் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீருடன் அத்திப்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் அந்த பாதிப்பு விரைவில் குணமாகும்.

9)உலர் அத்திப்பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் கே மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்டவற்றிற்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.